இண்டர்நெட் இல்லாமலே ஜிபிஎஸ் பயன்படுத்தலாம்!

ஜிபிஎஸ் (GBS) என்பது ஸ்மார்ட்போனில் முக்கியமான அம்சமாகும். இதன் பயன் நாம் ஆளில்லாத இடத்தில் மாட்டிக் கொள்ளும் போது தான் தெரியும்.
இதைப் பயப்படுத்தி குறிப்பிட்ட இடத்தை சென்றடைய கண்டிப்பாக இண்டர்நெட் என்பது அவசியமானதாகும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் இண்டர்நெட் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?
கவலையவிடுங்க.. இண்டர்நெட் இல்லாமலே உங்கள் ஸ்மார்ட்போனில் ஜிபிஎஸ் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
குறிப்பிட்ட பயணத்திற்கு முன்பே ஆப்லைன் மேப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை செய்ய உங்களிடம் நிச்சயமாக இண்டர்நெட் இருக்க வேண்டும்.
உங்களிடம் ஒருவேளை கூகுள் மேப்ஸ் (Google maps) ஆப் இல்லையெனில் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


குறிப்பிட்ட இடத்தின் பெயரை கூகுள் மேப்ஸ் ஆப்பில் உள்ளிட்டு நீங்கள் விரும்பும் இடத்தின் தேடலை நிகழ்த்த வேண்டும்.
இடம் பெயரை பதிவு செய்த பின் கீழே உள்ள பதிவிறக்க பொத்தாபை கிளிக் செய்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
ஆஃப்லைன் மேப் பதிவிறக்கம் செய்யப்பட்ட பின் நீங்கள் உங்கள் பயணத்தை தொடங்கலாம். உங்கள் இண்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால் கூட கூகுள் மேப்ஸ் தன்னிச்சையாக குறிப்பிட்ட இடத்தை கண்டறிந்து ஆஃப்லைன் வரைபடங்கள் உதவியுடன் வழிகாட்டலை நிகழ்த்தும்.
Share:

Popular Posts