Showing posts with label அதிர்ச்சி. Show all posts
Showing posts with label அதிர்ச்சி. Show all posts

கருப்பு கரம் தொட்ட போது சிலுவையின் கரம் மீட்டது

நாகரிகம் என்ற பெயராலே குடிப்பழக்கத்துக்கும் போதைப் பொருளுக்கும் இச்சைகளுக்கும் அடிமையாயிருந்த இந்த வாலிபர் கருப்பு கரம் பிடித்திருந்தது
Share:

விஜயின் அதிரடி அறிவிப்பால், கலங்கி போன அரசியல்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் விளங்கி வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-62 படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே தீவிர அரசியலில் குதித்து விட்டனர், இவர்களை தொடர்ந்து தளபதி விஜயும் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டே உள்ளன.இந்நிலையில் தற்போது விஜயும் ரஜினியை போலவே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஒருங்கிணைக்க www.vijaymakkaliyyakam.in என்ற இணையதளம் தொடங்கியுள்ளார்.

விஜயின் இந்த நடவடிக்கையால் அரசியல் வட்டாரமே சற்று அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது, இதனால் தளபதி விஜயும் அரசியலில் நுழைய உள்ளாரோ என பலர் குழப்பமடைந்துள்ளனர்.
Share:

தமிழ் மாணவிக்கு, கனடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை.. நாடு கடத்தப்படும் அபாயம் ..

கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர். இவர்களின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்துமாறு கனேடிய அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்த போதும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 இலங்கை குடும்பத்தை நாடு கடத்த எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக திய ஜனநாயக கட்சி உறுப்பினர் Alexandre Boulerice தெரிவித்துள்ளார். 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் எதிர்வரும், ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார் என கனேடிய ஊடகம் குறிப்பிட்டிருந்தது. பிரஞ்சு சரளமாக தமிழ்  பேச கூடிய குறித்த மாணவி scolaire de Montréal ஆணையத்தினால் விருதொன்றையும் பெற்றிருக்க வேண்டியவர் என குறிப்பிடப்படுகின்றது.

 நாடு கடத்தலுக்கு எதிராக கனேடிய ஊடகங்கள் உட்பட ஐம்பத்திற்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாக மாணவியின் தந்தை ரொபர்ட் ராஜரட்ணம் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். கணிதத்தில் 94 வீத சித்தியை பெற்ற திறமையான இந்த மாணவியின் குடியுரிமை நிலை தொடர்பில் கவனம் செலுத்த அனுமதித்தால் அவரால் கனேடிய சமூகம் பெரிதும் பயன் பெறும் என்று நம்புவதாக scolaire de Montréal ஆணையத்தின் தலைவர் Catherine Harel-Bourdon மாணவிக்கு ஆதரவாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். scolaire de Montréal ஆணையத்தின் ஆணையர்கள், புதனன்று அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

 லியோனி பவித்ரா மற்றும் அவரது குடும்பத்தின் நாடு கடத்தல் தொடர்பில் கனேடிய பிரதமர் கவனம் செலுத்துவதுடன் ஊடாக இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாக கியூபெக் solidaire இன் அமீர் காடிர் தெரிவித்துள்ளார். கியூபெக் ஏற்றுக்கொண்டமை மற்றும் கற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கான சான்றிதழ்களை மாணவி பெற்றுள்ளார். இந்த நிலையில் கல்லூரி அவரை ஏற்றுக் கொண்டாலும் பவித்திரா வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொது நிர்வாகத்தில் காணப்படுகின்ற முரண்பாடே இதற்கு காரணம் என Boulerice தெரிவித்துள்ளார். இதேவேளை, புகலிடம் கோரிய விண்ணப்பங்கள் தொடர்பில் மாகாண அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் வழங்கவில்லை என Heurtel அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை மாணவி மற்றும் குடும்பத்தினரின் நாடு கடத்தல் பிரச்சினை ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Share:

அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும், தனது ஏவுகணை இலக்கில் வந்துள்ளது - வடகொரியா

வடகொரியா இன்று பாலிஸ்டிக் வகை ஏவுகணை ஒன்றை சோதனை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன, அதையும் மீறி நாங்கள் எங்கள் சோதனையை விடமாட்டோம் என்று வடகொரியா தெரிவித்திருந்தது.

உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து தனது சோதனையை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து சுமார் இரண்டு மாத காலமாக சோதனை மேற்கொள்ளாமல் இருந்த வடகொரியா, எந்த நேரத்திலும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் வடகொரியா இன்று உள்ளூர் நேரப்படி காலை 3.30 மணி அளவில் கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

அது கிழக்கு நோக்கி பறந்ததாகவும், ஆனால் அது முழுமையாக எந்த வகையில் தயார் செய்யப்பட்டது, எவ்வளவு தூரம் சென்றது என்பது குறித்து தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடகொரியா இந்த ஆண்டு பல ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்தாண்டு அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை ஒன்றை வடகொரியா தயார் செய்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த பின்னர் வடகொரியா ஒரு அணுசக்தி நாடாக அதன் இலக்கை அடைந்து உள்ளது. தற்போது அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும் தனது ஏவுகணை இலக்கில் வந்துள்ளது.

பெருமையுடன் பிரகடனம் செய்கிறோம் இறுதியாக வடகொரியா  அணுசக்தியை நிறைவு செய்யும் பெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது என வடகொரியா கூறி உள்ளது.

Share:

ஒற்றையாட்சியா? சமஷ்டியா? இணைப்பாட்சியா?

இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள், மக்களால் புனரமைக்கப்படுகின்றன. இதுவரைகாலமும், இறந்தவர்களை நினைவுகூரும் அடிப்படை மனித உரிமைகூட இலங்கையில் மறுக்கப்பட்டு வந்தன. இப்போது இது அனுமதிக்கப்படுவதால், நல்லிணக்கத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஒரேயடியாக பாராட்டிவிட முடியாது.  காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும், நிலத்தை இராணுவத்திடம் இழந்த மக்களும் இன்னமும் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள்.

நீண்டகாலச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைகுறித்து, இந்த நல்லாட்சி (?) அரசு வேண்டாவெறுப்புடனே நடந்து கொள்கிறது.

‘ ஏதோ சட்டத் சிக்கல் இருக்கிறது, சட்டமா அதிபர் திணைக்களம் பதில் சொல்ல வேண்டும், ரணிலோடு பேசுகிறோம், மைத்திரியோடு தனிப்பட்ட சந்திப்புக்களை மேற்கொள்கிறோம்’ என்றவாறு தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்து செல்கிறார்கள்.

சிறைக்கைதிகளை சனாதிபதி விடுதலை செய்யும் நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் அரங்கேறுகிறது.
இந்த விவகாரத்தில் மட்டும் நல்லாட்சி அதிகாரவாசிகளுக்கு என்ன பிரச்சினை?.

எதுவித நிபந்தனையுமின்றி, மேற்குலக- இந்திய பிராந்திய நலனிற்கு இசைவாக, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிமாற்றத்திற்கு உதவிய தமிழ் அரசியல் தலைமைகளால், அரசியல் கைதிகளை விடுவிக்கமுடியவில்லை என்பது பெருங்கொடுமை.

கூட்டமைப்பிற்குள் இருக்கும் உள்முரண்பாடுகளை தீர்ப்பதில், கோஷ்டி பிரிப்பதில் செலவிடும் பெரும்பகுதி நேரத்தை, மக்கள் முகங்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒதுக்கினால் என்ன என்பதுதான் வெகுமக்களின் கேள்வி.

அடிப்படைப்பிரச்சினைகளிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்கு உள்கட்சி விவகாரம் மற்றும் இடைக்கால அரசியல் யாப்பு முன்மொழிவு என்பன பூதாகரமாக்கப்படுகின்றன.

ஆட்சிமாற்றம் என்பது யுத்தவடுக்களை சுமந்துநிற்கும் மக்களின் வாழ்வில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

பிணைமுறி விவகார திரைக்குள் , எகிறிவரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த உண்மைகள் மறைக்கப்படுகின்றன.
இது பற்றியதான ஆழமான பார்வையை, சரியான புள்ளிவிபரங்களோடு அடுத்த பதிவுகளில் முன்வைப்போம்.

தற்போது உத்தேச அரசியல் யாப்பு குறித்தே சமூகவலைத்தளங்களிலும், அச்சு ஊடககங்களிலும் பரவலாகப் பேசப்படுகிறது.

‘ அது வரும் ஆனா வராது’ என்பதுபோல்தான் தமிழ் தலைவர்களும் தற்காப்பு நிலையெடுத்துப் பேசுகிறார்கள்.

‘ புரட்சி வெடிக்கும்’ என்கிறார் இன்னுமொரு பழந்தலைவர். கார்த்திகை மார்கழி மாதமானால், தையில் ‘போராட்டம் வெடிக்கும்’ என்பார்.

உள்ளூராட்சி தேர்தல் வருவதால், மாவீரர் புகழ்பாடும் புரட்சி கீதங்களும், மாவீரர்தின அழைப்புகளும் அவரிடமிருந்தே வருகின்றன.

மாவீரர் தினம் முடிந்தவுடன், மீண்டும் யாப்புச் செங்கோல் கையிலெடுக்கப்படும்.
ஒரே கூட்டு பல குரல்களில் பேசும்.

சமஸ்டி இல்லாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்பார் ஒருவர்.
வந்தாலும் வரலாம் என்பார் இன்னொருவர்.
எக்கிய ராஜ்யவிற்குள் எல்லாமே ( சமஸ்டி) அடங்கும் என்பார் அரசியல் துறைப் பொறுப்பாளர்.

இந்த ஆரவாரம் தணியும் போது, ‘எக்கிய ராஜ்ய என்றால் ஒருமித்த நாடு, அது ஒற்றையாட்சி என்று அர்த்தப்படாது’என்று பூகோள அரசியல் புது விளக்கம் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.

72, 78 இல் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பில், Unitary State , எக்கிய ராஜ்ய, ஒற்றையாட்சி என்றே மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது தமிழில், ஒற்றையாட்சியை ‘ஒருமித்தநாடு’ என்று தன்னிலை விளக்கம் அளிக்கின்றனர் கூட்டமைப்பினர்.
ஆனால் சிங்களச் சொல்லில் எந்த மாற்றமும் இல்லையே..!.

சட்டத் சிக்கல் ஏற்படும்போது, எந்த மொழிச் சொல்லை நீதிமன்றம் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளும்??.

‘எக்கிய ராஜ்ய’ என்கிற சொல்லாடல் ஒருமித்த நாடா? இல்லையா? என்பதற்கு அப்பால், அந்த ஒருமித்தநாட்டில் ஒற்றையாட்சியா? என்பதுதான் இங்கு விவாதத்திற்கூறிய விவகாரமாக இருக்கிறது.

அரசியலமைப்பானது எந்த அரசியல் யாப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.

சகல சட்டமியற்றும் அதிகாரங்களும், நாடாளுமன்றத்திடம் குவிந்திருக்கும் ஒற்றையாட்சியா?, அல்லது இரு தேசங்களின் இறைமையை ஏற்றுக் கொண்ட கூட்டு ஆட்சியா ( confederation) ? அல்லது 2009 ஆகஸ்டில் தமிழ் தலைமையால் முன்வைக்கப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியமா? என்பதனை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

இன்னும் இலகுவாகச் சொல்லப்போனால், ஒருமித்த நாட்டிற்குள் இருக்கும் ஆட்சி முறைமை என்ன?.

தீர்வினை நோக்கிய நேர்மையான உரையாடலில், ‘எக்கிய – ஒருமித்த’ போன்ற திசைதிருப்பல் வாதங்கள் தேவையற்றது.

ஆட்சி முறைமை என்ன?.

இதற்கு விடை சொன்னால் போதும்.
Share:

ஆட்டிப்படைக்கும் ஆளுமை.! பிரபாகரன்

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று.  இத்­த­கைய நிலையில், கடந்த 18ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சரும் பீல்ட் மார்­ஷ­லு­மான சரத் பொன்­சேகா உரை­யாற்­றிய போது, வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னையும் தொட்டுச் சென்­றி­ருந்தார். அவ­ரது உரையின் முக்­கி­ய­மான பகுதி அது.
“பிர­பா­க­ர­னிடம் தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிர­பா­கரன் உரு­வா­கி­யதால் தான், பீல்ட் மார்ஷல் ஒரு­வரும் உரு­வானார்” என்று அவர் கூறி­யி­ருந்தார்.
2011ஆம் ஆண்டு ஒஸ்­லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய, நோர்­வேயின், இலங்­கைக்­கான முன்னாள் சமா­தானத் தூதுவர் எரிக் சொல்­ஹெய்மும், அமெ­ரிக்­காவின் முன்னாள் உதவி இரா­ஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்­மி­ரேஜூம், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை ஒரு சிறந்த போரியல் வல்­லுனர் – இரா­ணுவ மேதை என்று குறிப்­பிட்­டி­ருந்­தனர்.
ஆனாலும், பிர­பா­க­ரனின் அர­சியல், இரா­ஜ­தந்­திர ஆளு­மையை அவர்கள் அந்­த­ள­வுக்கு சிறப்­பாக மதிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.  எனினும், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின், போரியல் ஆளுமை என்­பது, எவ­ராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாத ஒன்­றா­கவே இருந்­தது என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஒன்றும் பிர­பா­க­ர­னுக்கு புக­ழாரம் சூட்­டு­வ­தற்­காக, பாரா­ளு­மன்­றத்தில் அந்தக் கருத்தைக் கூறி­யி­ருக்­க­வில்லை. அது பிர­பா­க­ரனின் போரியல் ஆளு­மையை வெளிப்­ப­டுத்தும், அங்­கீ­க­ரிக்கும் கருத்து என்­பதில் சந்­தே­க­மில்லை.
இன்று இலங்­கையின் முப்­ப­டை­களும் அதி­ந­வீன ஆயு­தங்கள், போர்த்­த­ள­வா­டங்­க­ளுடன் இருக்­கின்­றன என்றால், மூன்று இலட்சம் படை­யி­னரைக் கொண்­ட­தாக விளங்­கு­கி­றது என்றால், அதற்கு ஒரே காரணம் பிர­பா­கரன் தான்.
அதனால் தான், பிர­பா­க­ர­னிடம் தான் நாங்கள் போரைக் கற்றோம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருந்தார்.
போர் தொடங்­கிய போது, வெறும் 10 ஆயிரம் படை­யி­னரே இலங்­கையில் இருந்­தனர். அப்­போது எந்த நவீன போர்த் தள­வா­டங்­களும் படை­யி­ன­ரிடம் கிடை­யாது. போருக்­கான ஆயத்­த­நி­லையும் இல்லை.
இருந்­தாலும், மர­புசார் பயிற்­சி­களைப் பெற்ற ஓர் இரா­ணுவம் இருந்­தது. அதனை எதிர்­கொண்டு தான் பிர­பா­கரன் தனது போர் ஆற்­றலை வளர்த்துக் கொண்டார்.
பிர­பா­கரன் எங்கும் போர்க்­க­லையைக் கற்­க­வில்லை. எந்த நாட்­டி­டமும் பயிற்­சி­களைப் பெற­வில்லை. ஆனாலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவே, பிர­பா­க­ர­னிடம் தான் போரைக் கற்றுக் கொண்டோம் என்று கூறும் அள­வுக்கு அவ­ரது போர் ஆளுமை அமைந்­தி­ருந்­தது.
இலங்கை இரா­ணுவம் இப்­போது, உலகில் கவ­னிக்­கத்­தக்க ஓர் இரா­ணு­வ­மாக இருக்­கி­றது என்றால்,  இலங்கை இரா­ணு­வத்­திடம் போர் அனு­ப­வங்­க­ளையும் நுட்­பங்­க­ளையும் கற்­றுக்­கொள்ள பல நாடுகள் முற்­ப­டு­கின்­றன என்றால், அதற்கு ஒரே காரணம், பிர­பா­க­ரனின் போர் ஆளுமை மட்டும் தான்.
அந்த ஆளு­மையைத் தோற்­க­டித்த ஒரே கார­ணத்­தினால் தான், இலங்கை இரா­ணு­வத்­துக்கு இந்த மவுசும் மதிப்பும் கிடைத்­தது. வெளி­யு­லக ஆத­ரவு இல்­லாமல் ஒரு படைக்­கட்­ட­மைப்பை உரு­வாக்கி, சர்­வ­தே­சத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அள­வுக்கு அதனைக் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்தார் பிர­பா­கரன். பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, போர் தொடங்கும் போது, வெறும் 10 ஆயிரம் படை­யினர் தான் இருந்­தனர். இப்­போ­துள்ள 3 இலட்சம் படை­யினர் இருந்­தி­ருந்தால், இரண்டு ஆண்­டு­களில் போரை முடி­வுக்குக் கொண்டு வந்­தி­ருப்போம் என்று கூறி­யி­ருக்­கிறார்.
இலங்கை இரா­ணு­வத்­துடன் போரைத் தொடங்­கிய போது, விடு­தலைப் புலி­களும் ஒன்றும் ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளி­க­ளையோ, மிகப்­பெ­ரிய ஆயுத தள­வா­டங்­க­ளையோ, நவீன போர்க்­க­ரு­வி­க­ளையோ, சண்­டைப்­ப­ட­குகள், விமா­னங்­க­ளையோ கொண்­டி­ருக்­க­வில்லை.
ஐந்து பத்துப் பேரில் இருந்து தான், இரா­ணு­வத்­துக்கு எதி­ரான போர் புலி­களால் தொடங்­கப்­பட்­டது. குறைந்­த­ளவு போரா­ளி­களே இருந்­தாலும், இரா­ணு­வத்தின் செறிவு குறை­வாக இருந்­தமை, புலி­க­ளுக்குச் சாத­க­மாக இருந்­தி­ருக்­கலாம்.
அதனால் தான், இப்­போ­துள்ள படை­ப் பலம் இருந்­தி­ருந்தால் இரண்டு ஆண்­டு­களில் போரை முடித்­தி­ருக்­கலாம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருக்­கிறார்.
எனினும், படை­பலம் மாத்­தி­ரமே, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை வெற்­றி­கொள்­வ­தற்கு சாத­க­மான அம்­ச­மாக இருந்­தது என்ற கருத்து ஏற்­பு­டை­ய­தல்ல. மூன்­றா­வது கட்ட ஈழப்­போரில் கூட, இரண்டு இலட்சம் படை­யி­ன­ருடன் தான் அர­சாங்கம் இருந்­தது.
ஆனாலும் புலி­களை அப்­போது தோற்­க­டிப்­ப­தற்­கான சூழலும், உத்­தி­களும் வாய்க்­க­வில்லை.
பிர­பா­க­ர­னிடம் இருந்து போரிடும் முறை­களை மாத்­திரம் இரா­ணுவம் கற்றுக் கொள்­ள­வில்லை. பல ஆயு­தங்­களின் அறி­மு­கமும்  கூட இரா­ணு­வத்­துக்கு புலி­களால் தான் கிடைத்­தி­ருந்­தது.
1985ஆம் ஆண்டு ஜன­வரி 9ஆம் திகதி, அச்­சு­வே­லியில் புலி­களின் முகாம் ஒன்றை இரா­ணு­வத்­தினர் சுற்­றி­வ­ளைத்­தனர். அது ஓர் ஆயுதக் களஞ்­சி­ய­மா­கவும் விளங்­கி­யது. அங்­கி­ருந்து தான், ஆர்.பி.ஜி என்ற ரொக்கட் லோஞ்சர் முதன்­மு­த­லாக இரா­ணு­வத்தின் கையில் கிடைத்­தது.
அதற்குப் பின்னர் அதே ஆர்.பி.ஜிகளை பெரு­ம­ளவில் இரா­ணுவம் வாங்கிக் குவித்­தது. அது­போல பல ஆயுத தள­வா­டங்­களை விடு­தலைப் புலிகள் போரில் அறி­மு­கப்­ப­டுத்­திய பின்­னரே, இரா­ணு­வத்­தினர் அதனை வாங்க முயன்­றனர்.
சாம் எனப்­படும் விமான எதிர்ப்பு ஏவு­க­ணை­க­ளையும் விடு­தலைப் புலி­க­ளுக்குப் பின்னர் தான் விமா­னப்­படை வாங்­கி­யது. பல்­குழல் பீரங்­கி­க­ளையும் விடு­தலைப் புலிகள் தான் முதன் முதலில் இலங்­கையில் பயன்­ப­டுத்தத் தொடங்­கினர்.
Share:

மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல், 184 பேர் பரிதாப பலி

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே இன்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 184 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிராத்தனைக்காக மசூதிக்கு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இதனையடுத்து, எகிப்து பிரதமர் அப்துல் பாத்தா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசணை கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும் ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.




இரண்டாம் இணைப்பு..


கெய்ரோ: எகிப்தில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் எல் ஐரிஸ் என்ற நகரின் தலைநகரில் அல் ரவாடா பகுதியில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் சரமாரியாக சுட்டான். அந்த மசூதி மீது பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலும் நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 235 பேர் உடல் சிதறி பலியாகினர். 100-க்குமு் மேற்பட்டேர் காயமடைந்தனர்.


எகிப்து வரலாற்றில் இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதலில் இது தான் மிகப்பெரிய தாக்குதல் என அந்நாட்டு டி.வி.சானல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.


தாக்குதல் சம்பவத்தையடுத்து அந்நாட்டு அதிபர் அப்துல் பதா அல் சிசி, உயரதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்றுநாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளதாவும், விமான நிலையங்கள், மக்கள் கூடும் வழிபாட்டு தலைங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
Share:

மெர்சல் படத்தை மிஞ்சிய கதை

டெங்குவுக்கு பலியான சிறுமியின் சிகிச்சைக் கட்டணமாக இலங்கைப் பெறுமதியில் சுமார் முப்பத்தைந்து இலட்ச ரூபாவைக் கோரிய வைத்தியசாலை மீது சமூக வலைதளங்கள் உட்பட பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் வசித்து வந்த அத்யா சிங் (7) என்ற சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் டெங்குவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சைகளுக்காக அவர் ‘ஃபோர்டிஸ்’ என்ற தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அத்யாவைக் காப்பாற்ற முடியவில்லை. ஏழு வயது மகளைப் பறிகொடுத்த சோகத்தில் இருந்த அந்தக் குடும்பத்தாரிடம் இந்தியப் பெறுமதியில் பதினாறு இலட்ச ரூபாய் கட்டணமாகச் செலுத்துமாறு இருபது பக்கங்கள் அடங்கிய பற்றுச் சீட்டு வழங்கப்பட்டது. இதனால் நொறுங்கிப்போன அந்தக் குடும்பம், வேறு வழியின்றி குறித்த கட்டணத்தைச் செலுத்தியது.
இந்த விவகாரத்தை அக்குடும்பத்தின் உறவினர் ஒருவர் ட்விட்டரில் அண்மையில் வெளியிட்டிருந்தார். வெளியான சில நிமிடங்களில் பத்தாயிரம் முறைக்கும் மேலாக அந்த ட்வீட் மீள்பதிவிடப்பட்டது. மேலும், குறித்த வைத்தியசாலை மீதான கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
“எனது மகளின் உயிரற்ற உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஒரு அம்பியுலன்ஸைத் தரவும் வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துவிட்டது. மகள் இறக்கும்போது அணிந்திருந்த வைத்தியசாலையின் ஆடையையும் தம்மிடம் ஒப்படைக்கும்படி கூறியது எம்மை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது” என்று அத்யாவின் தந்தை ஜெயந்த் சிங் தெரிவித்துள்ளார்.
Share:

ஸ்மார்ட் போன்களில் நுண்ணுயிர் கிருமிகள் ?

ஸ்மார்ட் போன்களில் நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வதாக விஞ்ஞான ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் சம்மந்தமாக பல்வேறு ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதில், சமீபத்திய ஆய்வில் கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பாக்டீரியா மற்றும் கிருமிகள் ஸ்மார்ட்போன்களில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது 10-12 வகையான கிருமிகள் ஸ்மார்ட்போன்களில் இருப்பதும், இவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கிருமிகளின் பாதிக்கப்பிலிருந்து தப்பிக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்
Share:

Popular Posts