Showing posts with label அமெரிக்க. Show all posts
Showing posts with label அமெரிக்க. Show all posts

இராணுவம் செய்தது தவறு.. ஒப்புக்கொண்ட மைத்திரிபால ..!

கொழும்பு: ''இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும,'' என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ராணுவத்தினரால் 40,000 க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா., புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதுவரை இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக பேசி வந்த சிறிசேனா, முதல் முறையாக எதிராகவும், பல அதிர்ச்சிகர தகவல்களையும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து சிறிசேனா பேசியதாவது:
இலங்கையில், விடுதலை புலிகளுக்கு எதிராக 2009 ம் ஆண்டு நடந்த
இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ராணுவத்தினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இதை மனசாட்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
போரில் நாட்டுக்காக சண்டையிட்டவர்களை ஆளும் கட்சி வேட்டையாடி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதனை நான் நிராகரிக்கிறேன். ராணுவம் தன் மீதுள்ள கறையை அகற்ற வேண்டிய நேரம் இது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி சில விஷயங்கள் நடந்துள்ளன. அவை ஜனநாயகம் மற்றும் மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானதுடன், சட்ட விரோதமானதும் கூட.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. போர்க்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்
பட்டுள்ளவர்கள்
நிரபராதிகள் என தெரிய வந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள், என்றார்.
Share:

ஜெகத் ஜயசூரிய மீதான – போர்க்குற்ற வழக்கால் இலங்கைக்கு பிரச்சினை ! ஐ.நா அறிக்கையாளர் எச்சரிக்கை

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் நாட்டில் தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு, இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மிகப்பெரிய பிரச்சினையாக உரு வெடுக்கலாம் என ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.

இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை உத்தரவாதங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் தனது இரண்டு வாரகால விஜயத்தின் முடிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் இராணுவத் தளபதி ஜயசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்ப ட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசா ங்கம் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

\”உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ பொறுப்புக் கூறல் கோரப்படலாம்\” என அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் 2009ஆம் ஆண்டு, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் காணாமல் ஆக்கப்படுவதற்கும்,

சித்திர வதை செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்த ராணுவ குழுக்களுக்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார் என தென் அமெரிக்கா நாடுகளில் மனித உரிமை குழுக்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு தாக்கல் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்த மோதல்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உரிய நம்பகமான பொறுப்பு கூறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் பப்லோ டி கிரிவ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதற் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்த அவர், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்துடன், நான்கு விஜயங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கும் நோக்கில் முதல் மூன்று விஜயங்களும் அமைந்திருந்ததாகக் கூறிய அவர், இலங்கை அரசு உறுதியான தீர்மா னங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஒரு சிக்கலான சூழலில், ஐ.நாவின் மனித உரிமைப்
பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் தேவைக்காக இந்த விஜயம் அமைந்துள்ளதாக சுட் டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதிய சட்டம் உரு வாக்கப்பட வேண்டும். காணாமல் போனோ ருக்கான அலுவலகம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அதற்கான அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அரச தரப்பினர் மட்டுமல்லாமல் நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கும் விஜயம் செய்து பல் வேறு தரப்பினரையும், பாதிப்புக்கு உள்ளானவர்களையும் சந்தித்துள்ளதாகவும், இந்த சந்திப்புக்கள் தொடர்பிலான அறிக்கையும், நிலைமைகள் தொடர்பிலான தனது பரிந்து ரைகளையும் உள்ளடக்கிய முழுமையான தோர் அறிக்கை அடுத்த வருடம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Share:

அடுத்த மாதம் வெடிக்கும் 3ம் உலகப்போர்

அடுத்த மாதம் வட கொரியாவின் எல்லைக்கு செல்ல உள்ளார் அமெரிக்க அதிபர் டொனால் ரம். பல உலகத் தலைவர்கள் உடனே தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, அபத்தமான இந்த பயணம் வேண்டம் என்று சொல்ல அதனை ஒருவாறு செவி மடுத்தார் ரம். ஆனால் வந்தால் அவ்விடத்திற்கு ஏவுகணை ஏவுவேன். முடிந்தால் வரட்டும் பார்க்கலாம் என்று வட கொரிய அதிபர் கூறியதை அடுத்து. திட்டமிட்டபடி வட கொரிய எல்லை ஒன்றுக்கு ரம் செல்ல உள்ளார்.

இது தென் கொரியா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளின் எல்லை ஆகும். இந்த இடத்திற்கு டொனால் ரம் செல்வது. மிக மிக ஆபத்தான விடையமாக பார்க்கப்படுகிறது. காரணம் அவரது உயிருக்கு ஆபத்து என்பது அல்ல. தற்செயலாக ஒரு துப்பாக்கி சூடு நடந்தாலும். அது இரு நாடுகளுக்கு இடையே போர் மூழும் அபாயத்தை தான் தோற்றுவிக்கும். இது போக டொனால் ரம் வருகையை ஒட்டி. குறித்த எல்லைப் பகுதில் மட்டும் பல ஏவுகணை எதிப்பு பீரங்கிகள். மற்றும் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்படுகிறது.அதுபோக அவ்விடம் முழுவதுமாக தென் கொரிய ராணுவம் குவிக்கப்பட்டும் வருகிறது. இவ்வாறு ஒரு பெரும் நெருக்கடிக்குள் தான் ரம் அங்கே செல்லவுள்ளார். இது அமெரிக்கா வேண்டும் என்றே செய்யும் ஒரு செயல் என்று வட கொரியா கூறி, பெரும் கண்டனத்தை வெளியிட்டுள்ள நிலையில். அவ்விடத்திற்கு வட கொரியா ஏவுகணை ஏவினால் என்ன செய்வது என்பது ஒரு பெரும் கேள்விக் குறியாக உள்ளது. இதேவேளை 2ம் உலகப் போருக்கு பின்னர், தற்போது தான் அணு குண்டு, தாக்குதல் விமானத்தை  24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அமெரிக்க அதிபர் ஒருவர் உத்தரவிட்டுள்ளார். என்றும் கூறப்படுகிறது
Share:

Popular Posts