Showing posts with label ஆராய்ச்சி. Show all posts
Showing posts with label ஆராய்ச்சி. Show all posts

தலை பாகை தமிழ் கவியுடன் சந்திப்பு

நகைசுவை நாடகத்தின் பாகம் 01
Share:

முதுமையை தள்ளிப்போட முடியுமா?

முதுமையில் பறிபோன இளமையை நினைத்து கவலைப்படாதவர்கள் இருக்க முடியாது. அதனால், இளமையை தக்கவைத்துக்கொள்ளும் ஆராய்ச்சியை மருத்துவ விஞ்ஞானிகள் சிந்திக்காமல் இருப்பார்களா?
அந்த ஆராய்ச்சியில் பல காலமாக ஈடுபட்டு வந்தவர்கள் இப்போது வெற்றியும் கண்டுள்ளனர்.
உடலின் முதுமைக்கு காரணம், உடம்பில் உள்ள செல்களின் ஜீன்கள், டி.என்.ஏ. போன்றவை பலவீனமடைவதுதான். அதை எப்படி பாதுகாக்கலாம் என யோசித்த ஆராய்ச்சியாளர்களுக்கு, செல்களில் சக்தி கேந்திரமாக விளங்கும் மைட்டோகாண்ட்ரியாவில் மாற்றங்களை ஏற்படுத்தி முதுமையை கட்டுப்படுத்த முடியும் என அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி வில்ஹெம் போர் முன்பு நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஆராய்ச்சியாளர்கள் குழு, ஜீன்கள், டி.என்.ஏ.வில் சேதம் ஏற்படுவதற்கு, நிகோடினமைடு அடினைன் டைலூசியோடைடு (என்.ஏ.டி.) என்ற சேர்மம் குறைவதுதான் காரணம் என்பதையும் கண்டுபிடித்தது.
அதனால், அந்த சேர்மத்தை (என்.ஏ.டி.) உருவாக்கி மீண்டும் உடலில் சேர்க்கும்போது, ஜீன்கள், மற்றும் டி.என்.ஏ. புத்துணர்வடைவதையும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சேர்மத்தை முதலில் புழுக்களுக்கும் எலிகளுக்கும் சோதனையாக கொடுத்துப் பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே அவற்றின் செல்கள் புதிய பொலிவுடன் ஆரோக்கியமாக செயல்பட்டுள்ளது. புழுக்கள், எலியின் ஆயுளும் கூடியுள்ளது. அடுத்து மனிதர்களுக்குதான், இனி முதுமைக்கு ஓய்வுதான்.
இதை வில்ஹெம்போர் தலைமையிலான மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Share:

Popular Posts