Showing posts with label ஓன்லைன். Show all posts
Showing posts with label ஓன்லைன். Show all posts

பொது இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய டிப்ஸ்

நம்மில் பெரும்பாலானோர் வெளியூருக்கோ அல்லது வெளியிடத்திற்கோ சென்றவுடன் Wi-Fi கிடைக்கிறதா என்று தான் பார்ப்போம்.

அப்படி பொது இடங்களில் கிடைக்கும் Wi-Fi இணையத்தள வசதியை நாம் பயன்படுத்தும் போது தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இதனால் நமது மொபைல் போனில் பதியப்பட்டிருக்கும் போட்டோ, வங்கிக் கணக்குகளின் தகவல்களை எளிதாக ஹேக்கர்கள்(Hackers) திருடி விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

பாதுகாப்பானதா என உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்

பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் Wi-Fi பாதுகாப்பானது என்றால் அதில் Password போன்ற தகவல்கள் கேட்கப்படும்.

Password பயன்படுத்தும் போது செய்திகள் பாதுகாப்பான மறைக்கப்பட்ட (Encrypted) தகவல்களாக இருக்கும்.

WPA or WPA2 Password கேட்கவில்லையெனில், பாதுகாப்பில்லை என்று அர்த்தமாகும்.

பாதுகாப்பான தளங்களை பார்வையிடலாம்

நாம் பயன்படுத்தும் தளங்கள் பாதுகாப்பானதாக இருந்தால் அதன் முகவரியில்(URL Address) https எனக் காட்டும்.

இதற்கு நாம் பயன்படுத்தும் மொபைல் போனை சரியான கால இடைவேளைகளில் அப்டேட் செய்வதன் மூலம் தகவல்களை திருடுவது கடினமாகிறது.
பணபரிவர்த்தனைகளை தவிர்க்கலாம்

பொது இடங்களில் ஓன்லைன் பணபரிவர்த்தனை செய்வதை தவிர்ப்பதன் மூலம் வங்கி கணக்குகள் திருடப்படுவதனை தடுக்கலாம்.

VPN இணைப்பினை பயன்படுத்தலாம்

பொது இடங்களில் Wi-Fi பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல் இருப்பின் VPN (Virtual Private Network) இணைப்பினை பயன்படுத்தலாம். இதன் மூலம் நம்முடைய தகவல்கள் Encryption செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

இதுதவிர 2FA-வை பயன்படுத்துவதன் மூலமாக கூடுதல் பாதுகாப்பினை பெறலாம்.

Wi-Fi யை தேவையற்ற போது தவிர்க்கலாம்

பொது இடங்களில் தேவையற்ற போது Wi-Fi இணைப்பதனை தவிர்க்கலாம், ஒருவேளை நீங்கள் இணைக்கும் போது உங்கள் போனில் Logout செய்யப்படாமல் வைத்திருக்கும் Email, Facebook, Twitter உட்பட உங்கள் கணக்கிலிருந்து தகவல்கள் திருடப்படலாம்.
Share:

பாஸ்வேர்ட் திருடர்கள் ?

பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர்.
இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை வைத்து தவறு இழைக்க எளிதாக போய் விடுகிறது.
ஏன் இப்படி எளிதான பாஸ்வேர்டுகளை வைத்து தவறு செய்பவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும் என கணினி வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்படி மோசடி செய்பவர்கள் எளிதான பாஸ்வேர்டுகளை வைத்துள்ள சாதாரண மனிதர்களின் 73 சதவீத கணினி கணக்குகளை கண்டுபிடித்து விடுவதாக கணினி வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பிரபல நிறுவனமான Yahoo கூறுகையில், வயது, abc123, 123456, Welcome, Sunshine, password, princess போன்றவைகளையே பலர் பொதுவான பாஸ்வேர்டுகளாக பயன்படுவதாக கூறியுள்ளது.
இந்த இணைய மோசடி மன்னர்களிடம் இருந்து தப்பிக்க நல்ல கடினமான பாஸ்வேர்டுகளை மக்கள் உபயோகபடுத்துவதே எல்லாவற்றுக்கும் தீர்வாக இருக்கும் என்பது கணினி வல்லுனர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
Share:

பாஸ்வேர்ட் திருடர்கள் ?

பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர்.
இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை வைத்து தவறு இழைக்க எளிதாக போய் விடுகிறது.
ஏன் இப்படி எளிதான பாஸ்வேர்டுகளை வைத்து தவறு செய்பவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும் என கணினி வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
x-sizing: border-box; color: #333333; font-family: "Source Sans Pro", Arial, sans-serif; font-size: 13px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;"> இப்படி மோசடி செய்பவர்கள் எளிதான பாஸ்வேர்டுகளை வைத்துள்ள சாதாரண மனிதர்களின் 73 சதவீத கணினி கணக்குகளை கண்டுபிடித்து விடுவதாக கணினி வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Popular Posts