Showing posts with label சிகிச்சை. Show all posts
Showing posts with label சிகிச்சை. Show all posts

ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களுக்கு நேர்ந்த அதே துயரம்

சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் அரசு படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிரியாவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தலைநகர் டமாஸ் குஷின் புறநகரான கிழக்கு கவுட்டா கடந்த 2012-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அதை சிரியா ராணுவம் சமீபத்தில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு ரஷியா உதவி புரிந்து வருகிறது. சிரியா ராணுவத்துடன் ரஷிய போர் விமானங்கள் அதிரடி குண்டு வீச்சு நடத்தின. அதில் பதுங்கு குழிகளுக்குள் முடங்கி கிடந்த 556-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர்.

எனவே, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஐ.நா.வில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர். அதை தொடர்ந்து சிரியாவில் மனிதாபிமான அடிப்படையில் 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதென முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

சிரியா முழுவதும் இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் அதை மீறி கிழக்கு கவுட்டா பகுதியில் சிரியா மற்றும் ரஷியாவின் போர் விமானங்கள் குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தின.

அதில் 21 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள். அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே குண்டு வீச்சில் காயம் அடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த போது கிழக்கு கவுட்டாவில் குளோரின் ரசாயன குண்டு வீசியிருப்பது தெரிய வந்தது. ரஷியா மற்றும் சிரியா ராணுவம் இணைந்து ரசாயன குண்டுகளை வீசியதாக புகார் எழுந்துள்ளது.

ஆனால் இதை ரஷியா மறுத்துள்ளது. ரசாயன குண்டு வீச்சுக்கு சிரியாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரவ் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிரியாவும் ரசாயன குண்டு வீச்சை மறுத்துள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கிடையே சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கவுட்டாவில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம், சரனாக்லேக் என்ற கிராமத்தில் நடைபெற்ற உலக பனி ஷூ விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் தன்வீர் உசேன் கடந்த பிப்ரவரி மாதம் சென்றார்.

இந்த நிலையில் அங்கு அவர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு 12 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அவர் மார்ச் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது எசெக்ஸ் கவுண்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோர்ட்டு விசாரணையின்போது அவர் தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி அந்த கோர்ட்டின் அரசு தரப்பு துணை வக்கீல் கிறிஸ்டி ஸ்பிராக் விடுத்துள்ள அறிக்கையில், “சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான குற்றச்சாட்டை தன்வீர் உசேன் ஒப்புக்கொண்டு விட்டார். அதை பிரமாண வாக்குமூலமாக அளித்துள்ளார்” என கூறினார். அவரது விசா கடந்த ஆகஸ்டு மாதமே முடிந்துவிட்டது.

அவரது தாயார் உடல் நலக்குறைவால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அவரது சகோதரியின் திருமணமும் ஒத்தி போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அவர் கோர்ட்டில் செய்துகொண்ட குற்ற உடன்படிக்கையின்படி தண்டிக்கப்படாமல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன. எனினும் அதற்கு சிறிது காலம் ஆகும் என தெரியவந்துள்ளது.
Share:

Popular Posts