Showing posts with label செவ்வாய் கிரகத்தில். Show all posts
Showing posts with label செவ்வாய் கிரகத்தில். Show all posts

பூமியைப் போன்ற சூழலை, செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்த முயற்சி..!

உயிரினங்கள்  தொடர்ச்சியாக வாழ்வதற்கு நீர், வளி மாத்திரம் இருந்தால் போதாது  என்பது அனைவரும் அறிந்ததே.

பூமியைப்  போன்ற  சூழலை  செவ்வாய்  கிரகத்தில்  ஏற்படுத்த   முயற்சி !

செவ்வாய் கிரகம் தொடர்பில் மும்முரமாக ஆராய்ந்து வரும் நாசா நிறுவனம், அங்கு உயிரினங்களை குடியமர்த்துவதற்கும் எத்தனித்து வருவதோடு,  பூமியைப் போன்ற சூழலை செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்தவும் முயற்சிகளை மேற்ககொண்டு வருகின்றது.

இதில் ஒரு அங்கமாக செவ்வாய் கிரகத்தில் உள்ள மண்ணைப் போன்ற மாதிரியை நாசா உருவாக்கியுள்ளது.

இந்த மண்ணில், மண்புழுக்களை ஆராய்ச்சியாளர் குழு ஒன்று வளர்த்துள்ளது.

பூமியைப்  போன்ற  சூழலை  செவ்வாய்  கிரகத்தில்  ஏற்படுத்த   முயற்சி !

மண்புழுக்கள் குறித்த மண்ணில் சிறப்பாக வளர்வதுடன் துளைத்து உட்செல்லக்கூடியதாகவும் இருப்பதால், இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மண் புழுக்கள் வாழ்வது சாத்தியம் என்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது வாஷிங்டன் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால்  மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

Popular Posts