போட்டோஷாப் கோப்புகளைப் பயன்படுத்தி தான் நாம் எழுத்துக்களில் மாயாஜாலம் செய்ய வேண்டும் என்பதில்லாமல் எளிய CSS Code -ஐ பயன்படுத்தி நாம் எழுத்துக்களில் அழகை புகுத்தலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இணையத்தில் சில இடங்களில் பயன்படுத்தும் எழுத்துக்கள் சரியாக தெரியாமல் இருக்கும் இதற்காக நாம் அந்த இடங்களில் ஒரு JPG படம் போட்டோஷாப் மூலம் உருவாக்கி பயன்படுத்துவோம் ஆனால் இனி எளிதாக ஆன்லைன் மூலம் இதற்காக CSS உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.wordpressthemeshock.com/css-text-shadow/
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி எழுத்திருக்கும் கட்டத்திற்குள் சொடுக்கி நாம் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தையை கொடுக்க வேண்டும் அடுத்து எந்த எஃபெக்ட் வேண்டுமோ ஒவ்வொன்றாக சொடுக்கி எது பிடித்திருக்கிறதோ அதை வைக்லாம், Font Family என்பதை சொடுக்கி எந்த வகையான எழுத்துரு நன்றாக இருக்கிறதோ அதையும் தேர்ந்தெடுத்துவிட்டு Get code என்ற பொத்தானை சொடுக்கினால் தெரியும் Code -ஐ காப்பி செய்து எந்த இடத்தில் வேண்டுமோ அங்கு பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். எளிதாக நாமும் CSS மூலம் அழகான டிசைன் இது போல் உருவாக்கலாம். CSS பற்றி தெரியாதவர்களுக்கும் CSS பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Showing posts with label பூக்களைச். Show all posts

மாதுளம்பழத்தின் மருத்துவ குணங்கள்
மாதுளம்பழத்தின் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது.
நாம் உண்டு வரும் பழங்கள் எல்லாம் மருத்துவ தன்மை வாய்ந்தது. அதில் மாதுளை ஒரு அற்புத மருத்துவ தன்மை கொண்டது. அதன் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது ஆகும். மாதுளையின் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவதில் பயன்படுபவை.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம், இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பூ, பழத்தோல் ஆகியவை ரத்தப் போக்கைக் கட்டப்படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சியை உண்டாக்கும். பூ, பசியைத் தூண்டும். மரப்பட்டை, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை, ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். பல நோய்களையும் கட்டுப்படுத்தி உடலை வளமாக்க மாதுளை பயன்படுகின்றது.மயக்கம், தலைச்சுற்றல், தொண்டை வறட்சி, புளிப்புயேப்பம், வாந்தி தீர :
மாதுளம் பழச் சாறு, 100 மி.லி. அளவு காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.
ரத்த மூலம் கட்டுப்பட :
பூச்சாறு 15 மி.லி. சிறிதளவு கற்கண்டு சேர்த்து, காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வரலாம்.
உடல் குளிர்ச்சி பெற :
ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, காலையில் குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க :
மாதுளம் பழச்சாறு குடிப்பது உடனே பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ரத்த சோகையும் ஏற்படக்கூடும். இதற்கும் மாதுளம் பழச்சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாற்றுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்துச் சாப்பிட குணம் பெற முடியும்.
வயிற்றுப் போக்கு, பேதி தீர :
மாதுளம் பிஞ்சை நன்றாக அரைத்து, பசைபோலச் செய்து கொண்டு, நெல்லிக்காய் அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்யலாம்.
வாய்ப்புண், தொண்டை ரணம், வலி தீர :
மாதுளம் பூக்களைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை 1/2 தேக்கரண்டி யளவுல், 1/4 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வாய் கொப்புளித்து வர வேண்டும்.
மாதுளம் பற்கள் :
பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு, முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தால் உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கப்பட்டிருக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடவது மிகவும் அவசியமானதாகு