Showing posts with label யூதர்கள். Show all posts
Showing posts with label யூதர்கள். Show all posts

''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர்

சமாதானத்தை நோக்கி நகரும் விதமாக, ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர் என்ற உண்மையுடன் பாலத்தீனியர்கள் கட்டாயம் உடன்பட வேண்டும் என இஸ்ரேஸ் பிரதமர் கூறியுள்ளார்.
ஜெருசலேம் 3,000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்த மக்களுக்கும் தலைநகராக இருந்ததில்லை என இஸ்ரேஸ் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்த பிறகு முஸ்லிம்கள் மற்றும் அரபு உலகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் பெஞ்சமின் நெதன்யாகு இக்கருத்தைக் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகில் வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன.
ஜெருசலேமில், மத்திய பேருந்து நிலையத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு வீரரைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்திய ஒரு பாலத்தீனியர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் உடனான பேச்சுவார்த்தைக்கும் பிறகு பேசிய பெஞ்சமின் நெதன்யாகு,''ஜெருசலேமிற்கும் யூத மக்களுக்கு உள்ள ஆயிரமாயிரம் இணைப்புகளை மறுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அபத்தமானது'' என கூறினார்.
''இதைப்பற்றி மிகவும் நல்ல புத்தகமான பைபிளில் படிக்கலாம்'' என கூறினார்.
''எங்கள் புலம்பெயர்ந்த யூத சமூகத்தின் வரலாற்றின் மூலம் இதைப்பற்றி நீங்கள் அறியலாம். ஜெருசலேம் இல்லாமல் வேறு எங்கு இஸ்ரேலின் தலைநகர் இருக்கும்'' என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு.
''இந்த உண்மையுடன் விரைவில் பாலத்தீனியர்கள் உடன்பட்டால், விரைவாக நாம் அமைதியை நோக்கி நகரலாம்'' எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்,அமெரிக்க துணை அதிபரான மைக் பென்ஸ் உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது 'துரதிருஷ்டவசமானது' என மைக் பென்ஸின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எகிப்தின் மூத்த கிறித்துவ மற்றும் முஸ்லிம் மதகுருக்களும், மைக் பென்ஸ் உடனான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளனர்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்குப் பரவலான கண்டங்கள் எழுந்துள்ளன. ஜெருசலேம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா காத்துவந்த நடுநிலை, டிரம்பின் நடவடிக்கையால் மாறியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலத்தீனியர்களுக்கும் ஜெருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த இடம். யூதம், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் புனித தளங்கள் இங்கு உள்ளன.
ஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் எப்போதும் கருதுகிறது. ஆனால், 1967 போரின் போது கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக பாலத்தீனியர்கள் கூறுகின்றனர்.
Share:

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் பதிலடியில் 2 தீவிரவாதிகள் பலி

காசா சிட்டி: ஜெருசலம் நகர விவகாரத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் பலியானார்கள். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காசா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கி வந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில், காசா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் மூன்று ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்தினர்.

அவற்றில் ஒரு ராக்கெட் இஸ்ரேல் நாட்டின் தென்நகரமான ஸ்டெராட் மீது விழுந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் நேற்று காலை காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தின. காசா நகரின் மத்திய பகுதியில் உள்ள நுசெய்ரட் நகரின் மீது தாழ்வாக பறந்துசென்ற போர் விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் இரண்டு ஆயுத தொழிற்சாலைகள் மற்றும் வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கு, ராணுவ முகாம் ஆகியவை நாசம் அடைந்ததாகவும், ஹமாஸ் போராளிகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தலைநகராக ஜெருசலம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை மொத்தம் 4 ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பாலஸ்தீனம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

1967ம் ஆண்டு வரை ஜோர்டான் வசமிருந்த  கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் 1980ல்  இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலம் நகரில் யூத,  கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும்  இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறி அமைத்த  வசிப்பிடங்களில் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
Share:

டிரம்ப் முடிவுக்கு எதிராக, கிளர்ந்தெழுந்த ஐரோப்பிய நாடுகள்

அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த தூதர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபரின் இந்த முடிவு ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானத்துக்கு பொருத்தமற்றது. மத்திய கிழக்கு பிராந்திய அமைதிக்கு இதனால் நன்மை ஏற்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share:

அமெரிக்காவுக்கு சௌதி அரேபியா கடும் கண்டனம்

சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு "நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற" செயல் என்று தெரிவித்துள்ளது.
ஆனால், இது ஒரு "வரலாற்று சிறப்புமிக்க நாள்" என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.
'இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்': டிரம்ப்பின் அறிவிப்பில் என்ன முக்கியத்துவம்?
டிரம்பின் இந்த அறிவிப்பு, பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அமெரிக்க கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது. ஜெருசலேம் குறித்த சர்ச்சை இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்கள் இடையே பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
அமெரிக்காவின் இந்த முடிவையடுத்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 நாடுகளில், 8 நாடுகள் இந்த வார இறுதியில் அவசர கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளன.
என்ன முக்கியத்துவம்?
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக வெளியான அமெரிக்காவின் அறிவிப்பு, ஜெருசலேம் தொடர்பான நிலைப்பாட்டின் மீது சர்வதேச சமூகத்தின் பார்வைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்துள்ளது..
பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால அரசின் தலைநகரமாகக் கூறுகின்றனர். மேலும், 1993 ஆண்டு நடந்த இஸ்ரேல்-பாலத்தீனிய சமாதான உடன்படிக்கைகளின்படி, அதன் இறுதி நிலை சமாதானப் பேச்சுவார்த்தைகளின் கடைசி கட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும்.
ஜெருசலேம் மீது இஸ்ரேலின் இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.
இதுவரை அனைத்து நாடுகளும் அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை பராமரிக்கின்றன.
யூத, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதநம்பிக்கைகளுக்கும் நெருக்கமான புனித தளங்கள் ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது.
பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேத்தை , 1967 ஆம் ஆண்டில் நடந்த 6 நாள் போர் முடிந்த பின்னர் இஸ்ரேல் இணைத்தது. ஆனால், இது சர்வதேச அளவில் இஸ்ரேலின் பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை.
டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
'இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்' : டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
'வரலாற்று சிறப்புமிக்க நாள்'
டிரம்ப்பின் அ றிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
"மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஜெருசலேம் எங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் பிரார்த்தனைகளின் மையமாக இருந்தது," என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.இதனிடையே, பாலத்தீன தலைவர் அப்பாஸ் தனது முன் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி உரையில் ஜெருசலேம்தான் பாலத்தீன அரசின் என்றென்றும் நீடித்து நிலைக்கும் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Share:

இஸ்ரேலின் தலைநகராக, ஜெருசலேமை அறிவித்தார் ட்ரம்ப்

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து மத்திய கிழக்கில் புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.
“இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன்” என, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து அறிவித்தார்.
இவ்வறிவிப்பின் மூலம் ஜெருசலேமை உரிமை கோரிய இஸ்ரேல்-பலஸ்தீனத்தின் ஏழு தசாப்த போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அறிவிப்புடன் நின்றுவிடாத ட்ரம்ப், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க சார்பு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அதன் தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பினால் புதிய வன்முறைகள் வெடிக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்
Share:

அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும், பிரான்ஸ்

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967 மத்திய கிழக்கு போரின் போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.

இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. சர்வதேச சட்ட திட்டங்களின் படி இது ஆக்கிரமிப்பு நகராகவே கருதப்பட்டு வருகிறது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் பேசியிருந்தார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க தயாராக அமெரிக்கா இருப்பதாக செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மான் சஃபாதி, இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை ஒன்று திரட்டும் நடவடிக்கையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சனையை உண்டாக்கும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். பிரான்சை பொருத்தவரை இவ்விவகாரத்தில் எந்த முடிவும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பேச்சுவார்த்தைக்கு உள்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

Share:

Popular Posts