ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய Duo எனப்படும் புதிய video chatting app ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது அப்பிளின் FaceTime, மைக்ரோசாப்டின் Skype, பேஸ்புக்கின் Messenger app போன்றவை இது போன்று முகம் பார்த்து மற்றவர்களிடம் பேசிக் கொள்ளும் வசதியை அளிக்கிறது.
இந்நிலையில் இதே போன்ற வசதியை அளிக்க முடிவு செய்திருப்பதாக கடந்த மே மாதம் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படி Duo என்ற அப்பிளிகேஷனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மற்ற video chatting app போன்று இருந்தாலும் இதில் "Knock, knock" என்ற ஒரு புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மற்றும் தகவலை பெறும் நபர் என இருவரின் போன் நம்பர்கள் பதிவு செய்தால் மட்டுமே video chatting செய்ய முடியும்.
ஆனால் Duo அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மட்டும் தனது மொபைல் நம்பரை பதிவு செய்து கொண்டால் போதும்.
தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பதிவேற்றம் செய்து பயன்படுத்தக் கூடிய Duo அப்பிளிகேஷனின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Showing posts with label adsence. Show all posts
Showing posts with label adsence. Show all posts
அட்டகாசமான வசதி பேஸ்புக்இல்விரைவில் அறிமுகம்
இன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேடுபொறிகள் (Search Engine) காணப்படுகின்றன.
இவற்றில் இன்றுவரை முதல்வனாக திகழ்வது கூகுள் ஆகும்.
ஆனால் பேஸ்புக் நிறுவனம் கூகுளின் தொழில்நுட்பத்தினையும் தாண்டிய தேடுபொறியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelegent) நுட்பத்தினை கையாளவுள்ளது.
Facebook Deep Text எனும் குறித்த தேடு பொறியினை அறிமுகம் செய்யவுள்ளமை தொடர்பாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன் ஊடாக ஒரு செக்கனில் பல்லாயிரக்கணக்கான போஸ்ட்களை தேட முடியும்.
தவிர இந்த வசதியானது 20 மொழிகளில் கிடைக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது.
இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் பேஸ்புக் இணையத்தளம் கூகுளிற்கு பாரிய சவாலாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
YouTube Live 360 எனும் புதியவசதி
கூகுளைதாய் நிறுவனமாக கொண்டு செயற்படும் யூடியூப் நிறுவனமானது முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்குகின்றது.
இந் நிறுவனம் கடந்த வாரம் YouTube Live 360 எனும் புதியவசதியினை பயனர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது.
இவ் வசதியின் ஊடாக எந்தவொரு நிகழ்ச்சியையும் 360 டிகிரியில் பார்த்து மகிழ முடியும்.
இப் புதிய வசதியில் பொப்பாடகி டவுனின் நேரடி இசைநிகழ்ச்சி ஒன்று முதன் முறையாகப திவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுமார்30 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய இந்த வீடியோவினை மவுஸின் உதவியுடன் 360 டிகிரியில் சுழற்றி பார்க்க முடியும்.
இதற்கு பிரத்தியேகமான கணணி வன்பொருட்களோ, மென்பொருட்களோஅல்லது Virtual Reality ஹெட்செட்களோ தேவையில்லை.
அனைத்து வகையான கணணிகளிலும் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ளமுடியும்