பேஸ்புக் அக்கவுண்டை நிரந்தரமாக அழிப்பது எப்படி ?

பேஸ்புக்கில் தான் பலர் அனைத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நண்பர்களுடன் பேச ஒரு பேஸ்புக் அக்கவுண்ட், குடும்பத்தினர் கூட பேச ஒரு பேஸ்புக் அக்கவுண்ட், தெரியாத நபர்களுடன் பேச ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் என பல ஐடி வைத்திருப்பார்கள்.
அதே சமயம் இந்த அக்கவுண்ட்டை நாம் இனி பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்த பின்பு அதை அழிப்பது என்று தெரியாமல் நிற்பர்.
பயன்பாட்டில் இல்லாத சில அக்கவுண்ட்டை தற்காலிகமாக செயலிழக்க வைப்பது போலவே, நிரந்தரமாகவும் அழிக்க முடியும்.
ஒருமுறை நமக்கு இந்த பேஸ்புக் அக்கவுண்ட் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டால் Helpல் சென்று delete my account கொடுக்கலாம் ஒரு முறை நீங்கள் delete my account கொடுத்துவிட்டாலும் உடனே அந்த அக்கவுண்ட் delete ஆகாது. 14 நாட்கள் வரை அப்படியே தான் இருக்கும்.
அதை நீங்கள் மீண்டும் பயன்படுத்தாத பட்சத்தில் அந்த அக்கவுண்ட் அப்படியே செயலிழந்து விடும்.
உங்களுடைய அக்கவுண்ட் நிரந்தரமாக செயலிழக்க நீங்கள் 14 நாட்கள் வரை அந்த அக்கவுண்டை மீண்டும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

https://www.facebook.com/login.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Fhelp%2Fdelete_account
Share:

Popular Posts