சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவுக்கு திருமதி. தர்ஷிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மற்றும், தூண் நகராட்சியில் வாழும் சுவிஸ் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 18 வயது மேற்பட்டவர்களுக்கான குடியுரிமை பெறும் உயர்மட்டக்குழு விண்ணப்பதாரர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு குடியுரிமை வழங்கும் குழுவிலும் அங்கம் வகிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தை மாதம் முதல் தனது பணியை தர்சிகா கிருஸ்ணானந்தம் ஆரம்பிக்கவுள்ளார். அவருக்கான கடிதம் தூண் நகராட்சியினால் இன்று வழங்கப்பட்டுள்ளது, அந்த நகராட்சியில் குடியுரிமை வழங்கும் உயர்மட்டக்குழுவில் அங்கம் வகிக்கும் முதலாவது புலம்பெயர் பெண்மணியும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
Home »
7ஆவது அறிவு
,
ஈழத்தமிழ்
,
பிரஜா உரிமை
» ஈழத்தமிழ் பெண்மணி சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவில்