Showing posts with label adsence tamil. Show all posts
Showing posts with label adsence tamil. Show all posts

Facebook Watch வசதி

பேஸ்புக் ஆனது புதிய வீடியோ பிளாட்போம் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்ட இவ் வசதியின் ஊடாக நேரடி ஒளிபரப்புக்கள் மற்றும் எக்ஸ்குளூசிவ் வீடியோக்கள் என்பவற்றினை பார்த்து மகிழ முடியும். இவ் வசதியினை மொபைல் சாதனங்கள், டெக்ஸ்டாப் கணினிகள் மற்றும் பேஸ்புக் தொலைக்காட்சி அப்பிளிக்கேஷன் என்பவற்றினுடாகவும் பெற்றுக்கொள்ளலாம்.விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாகவும், பதிவு செய்தும் இந்த வசதியின் ஊடாக ஒளிபரப்பப்படவுள்ளது. தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவ் வசதியானது விரைவில் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Share:

புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக்

வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.

இதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும்.

இவ்வாறான வீடியோக்களின் இடையில் மாத்திரம் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும.

வழக்கமாக யூடியூப் வீடியோக்களில் ஆரம்பத்திலேயே விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது வாசகர்களுக்கு இடையூறாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களைப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரங்களின் ஊடாக கிடைக்கும் லாபத்தில் 55 சதவீத தொகையை வீடியோக்களை வெளியிடும் நபர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் விளம்பரம் மூலமாக மட்டும் சுமார் 700 கோடி டாலர்(96 சதவீதம்) அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியின் பெரும்பகுதி, கைபேசி மூலமாக வரும் விளம்பர வருவாய் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நிலவரத்தின்படி, நாளொன்றுக்கு 5 கோடி மக்கள் பேஸ்புக்கில் வீடியோக்களை காண்கின்றனர். அவர்கள் அனைவரும் வீடியோக்களை பார்க்கும் நேரம் அன்றாடம் சராசரியாக 10 கோடி மணிநேரமாக உள்ளது. இந்த பயன்பாட்டை சாதகப்படுத்திக் கொள்வதுடன் வருமானமாக்கும் முயற்சியில் பேஸ்புக் தற்போது களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share:

யூடியூப் தளமானது HDR ( High Dynamic Range) அறிமுகம் செய்து வருகிறது


யூடியூப் தளமானது தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது, HDR ( High Dynamic Range) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும் தரவேற்றம் செய்துகொள்ளக்கூடிய வசதியினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனால், பல வண்ணங்களை கொண்ட வீடியோக்களை பார்க்க முடியும். இதனால், காட்சிகள் அனைத்தும் தத்ரூபாமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும். இவ்வாறான வீடியோக்களை Chromecast Ultra மற்றும் 4K HDR சாதனங்களில் வாயிலாக பார்த்து மகிழ முடியும். இந்த வசதியினை யூடியூப் தனது தளம் ஆரம்பிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்துள்ளது.
Share:

Blogger இல் விளம்பரங்களை உருவாக்க மென்பொருள்

விளம்பர Bannerகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.ஏனென்றால் இதில் பல Template கள் இருக்கின்றன அதுவும் அளவு ரீதியாகவும் (728 x 90, 468 x 60) வகை (Category) ரீதியாகவும்  இருக்கிறது.நமக்கு எந்த அளவில் வேண்டுமானாலும் தெரிவு செய்து Banner களை உருவாக்க முடியும்.இப்படி நாம் உருவாக்கிய  Bannerகளை 

SWF
GIF
AVI
JPG
PNG
TIFF
BMP

போன்ற Format இற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.

 Download செய்வதற்கு

http://www.bannerdesignerpro.com/download/BannerDesignerPro.EXE

http://www.mediafire.com/?5y0u2kt3xq76jd8


இதையும் பயன்படுத்தி பாருங்கள. 

Easy GIF Animator 5 pro
Share:

Popular Posts